ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சர்வதேச அளவில் வெளிநாட்டு முதலீடுகளும், வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் இந்திய ஜவுளி சங்கத்தின் 78-வது தேசிய அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
இவ்விழாவில், ஜவுளி உற்பத்தியில் உலகளவில் சிறந்து விளங்கிய மற்றும் அதிக உற்பத்தி செய்த தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
பின்னர், வெளியிடப்பட்ட மாநாட்டின் ஆண்டறிக்கையில், மத்திய அரசும், பிரதமரும், பாலியஸ்டர் மற்றும் ரயான் நூல்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்ததால், ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் புத்துயிர் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தில் பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா அமைப்பதாக அறிவித்திருப்பதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
















