சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை ஒட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
எனது இளைய பாரதம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த யாத்திரையில் தேச நலன் சார்ந்த பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
கையில் தேசிய கொடியை ஏந்தியபடி நடைபெற்ற இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடத்தப்பட்டது.
















