திருமங்கலம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற மினிவேன் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம்போல, பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வாகனம் புறப்பட்டது.
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாகத் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநரும், உதவியாளரும் விரைந்து செயல்பட்டு வாகனத்தில் இருந்த மாணவிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வாகனத்தில் பற்றி எரிந்த தீணை தண்ணீர் வீசிடியத்து அணைத்தனர்.
இருப்பினும், பள்ளி வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில், பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, அரசு உதவிபெறும் பள்ளி வாகனத்தில் புகை வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்றபோது திடீரென வாகனத்தின் முகப்பு பகுதியில் இருந்து கரும்புகை வெளியான நிலையில், சாலையோரம் உள்ள கடையில் உள்ளவர்கள் ஓடிச் சென்று குழந்தைகளை மீட்டனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, அரசு உதவிபெறும் பள்ளி வாகனத்தில் புகை வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்றபோது திடீரென வாகனத்தின் முகப்பு பகுதியில் இருந்து கரும்புகை வெளியான நிலையில், சாலையோரம் உள்ள கடையில் உள்ளவர்கள் ஓடிச் சென்று குழந்தைகளை மீட்டனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.