நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோக்ரான் மம்தானியிடம் அதிபர் ட்ரம்ப் நகைச்சுவையாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் மேயர் சோக்ரான் மம்தானி, பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிபர் ட்ரம்ப் “பாசிஸ்ட்” என்று நினைக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே, குறுக்கிட்ட ட்ரம்ப், தன்னை “பாசிஸ்ட்” என்று கூறுங்கள், அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
















