சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டீக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிழவனூர் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவர், தனது டீக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இறந்தவரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்ததுடன் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















