ஹரியானாவில் ஓடும் காரின் மேற்கூரையில் நின்றபடி பயணித்த 3 பேர் கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது.
நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ஓடும் காரின் மேற்கூரையில் நின்றபடி சாலையில் பயணித்தனர். அப்போது எதிரே வாகனம் வந்ததால் காரின் ஓட்டுநர் திடீரெனப் பிரேக் பிடித்துள்ளார்.
இதில் காரின் மேற்கூரையில் நின்றிருந்த 3 பேரும் எதிரே வந்த லாரியின் சக்கரம் அருகே கீழே விழுந்ததில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















