மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சிறுத்தை தாக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்து விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
புனேவின் பிம்பர்கெட் கிராமத்தில் வயல் வெளிகளில் பணியாற்றும் விவசாயிகளைச் சிறுத்தை கழுத்து பகுதியைக் குறிவைத்து கடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் தங்களது கழுத்தில் ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்து கொண்டு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















