இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அனைத்து விதமான இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து விட்டதாக கூறினார். கிரீஸ் நாட்டின் யுனான், எகிப்தின் மிர் மற்றும் ரோமா போன்ற நாகரிகங்கள் இந்த பூமியை விட்டே மறைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், நம் இந்து நாகரிகம் தொன்றுதொட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், பாரதம் என்பது ஒரு அழியாத நாகரிகத்தின் வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். உலகின் பல மூத்த நாகரிகங்கள் அழிந்தாலும், நம் இந்து நாகரிகமும், சமூகமும் பூமியில் நிலைத்து நிற்கிறது என்றும், இந்துக்கள் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உலகமும் இல்லாமல் போய்விடும் எனவும் கூறினார்.
மேலும், பாரதத்தில் இருப்பவர்கள் அனைவருமே இந்துக்கள் எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், தற்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களாக இருப்பவர்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் என தெரிவித்தார்.
















