நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும் பி.ஆர்.கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நாளை மறுநாள் பொறுப்பேற்கிறார்.
இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த சூர்யகாந்த், 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் உடனடி கவனம் செலுத்துவேன் எனக் கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் நீதிபதிகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் வழக்குகளைக் குறைப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் மத்தியஸ்தம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் சூர்யகாந்த் குறிபபிட்டார்…
















