உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஹாக்கி விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, பொதுமக்கள் பார்வைக்காக உலகக் கோப்பை கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வகையில் புதுச்சேரியில் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, கோப்பையை அறிமுகப்படுத்தி, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
















