திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 கோடி எண்ணிக்கையிலான லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை என தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த கால ஆட்சியின் போது திருப்பதி பிரசாத லட்டுகளில் கலப்பட நெய் கலந்திருப்பது அம்பலமானது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 2019 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டது என திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், பக்தர்களின் வருகை மற்றும் லட்டுகளின் விற்பனை அளவை வைத்து கணக்கீடு செய்யப்பட்டாலும், விவிஐபி-க்களுக்கும் கலப்பட லட்டுகள் வழங்கப்பட்டதா என்பதை அறியமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
















