இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியா – பாகிஸ்தான் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை, சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்க நாடாளுமன்ற குழு குற்றம்சாட்டி உள்ளது.
இருதரப்பினருக்கு இடையேயான மோதலை, சீனா தனது புதிய மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளுக்கு சோதனை களமாகவும், விளம்பர மேடையாகவும் பயன்படுத்திக் கொண்டது என அக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மோதலின்போது பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்கள் மற்றும் உளவுத் தகவல்களை பெருமளவில் பயன்படுத்தியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















