மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு மாநில அரசின் தவறே காரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ திட்டத்தில் எத்தனை வீடுகள் இடித்து அகற்ற வேண்டும், எவளவு மக்கள் பயனிப்பார்கள் என்கிற முழு விபரம் திட்ட அறிக்கையில் இல்லை என தெரிவித்தார். மாநில அரசின் தவறு காரணமாகவே அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
மத்திய அரசை குறை சொல்லவே விவரங்களற்ற அறிக்கையை மாநில அரசு அனுப்பியுள்ளதாகவும் அவர் சாடினார்.
















