முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக திமுக உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாகி 1975 ஆம் ஆண்டு வெளியாகி நூற்று எழுபத்தி ஐந்து நாட்களையும் கடந்து வெற்றிகரமான சாதனை படைத்த திரைப்படம் இதயக்கனி.
தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், MGR பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது, MGR பன்முகத்தன்மை கொண்ட தலைவர்; அவருக்கு நிகர் யாருமில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
















