ஆந்திராவில் ஐடி வேலையை துறந்த இளைஞர் ஒருவர் மண்பாண்ட தொழிலைக் கையில் எடுத்து இரட்டிப்பு வருமானத்தை ஈட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த சாய் கோபி என்ற இளைஞர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். அதிக பணிச் சுமை காரணமாக மனு அழுத்தத்திற்கு உள்ளான சாய் கோபி ஒரு கட்டத்தில் தனது ஐடி வேலையைத் துறந்தார்.
பின்னர் தங்களது பாரம்பரிய வேலையான மண்பாண்ட தொழிலைத் தீவிரமாகச் செய்து வருகிறார். மண்பாண்ட தொழிலில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொண்ட சாய் கோபி தற்போது பானைகள் மற்றும் பாரம்பரிய சமையல் பாத்திரங்களை களிமண்ணால் செய்து அசத்தி வருகிறார்.
ஐடி வேலையில் மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்று வந்த சாய் கோபி, தற்போது குடும்ப தொழிலான மண்பாண்ட தொழில் மூலம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
















