டெல்லியில் 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், 328 கிலோ மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 262 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாகாலாந்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது ஒரு திருப்புமுனை நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் போதைப்பொருள் இல்லா இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இந்த நடவடிக்கை உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
















