விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் தங்கப்பாண்டியன் என்பவரது தோட்டத்தில் காட்டுப்பன்றி தொல்லைக்காக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாரிச்சாமி என்ற விவசாயி தனது தோட்டத்திற்கு உரம் போடுவதற்காகத் தங்கப்பாண்டியன் தோட்டத்தைத் தாண்டிச் சென்ற போது மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















