அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீன குடியேற்ற அதிகாரிகளால் ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் பயணி பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜோம் தோங்டாக், கடந்த 21ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் வழியில் ஷாங்காயன் புடாங் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாஸ்போர்ட் கவுண்டரில் குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் செல்லாது கூறியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதற்குப் பெமா விளக்கம் கேட்டபோது, தாங்கள் பிறந்த இடம் அருணாச்சல பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள், இது சீனாவின் ஒரு பகுதி என்பதால் இந்தியாவின் பாஸ்போர்ட் செல்லாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் குடியேற்றப் பணியாளர்களும், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் பரிந்துரைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தான் பயணிக்க வேண்டிய விமானங்களை தவறவிட்டதாகவும், நிதியிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நள்ளிரவில் சீனாவில் இருந்து புறப்பட்டதாக அவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
















