தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும், இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உரையாற்றிய அவர், திமுக கிளை நிர்வாகி முதல் தலைமை வரை லஞ்சம் பணம் செல்வதாக தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதாகவும் அவர் சாடினார்.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு நிதியளிக்கவில்லை என திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
















