பெங்களூரு ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் உடந்தையாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 19ம் தேதி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பச் சென்ற தனியார் நிறுவன வேனை மறித்து 7 கோடியே 11 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாகத் தலைமைக் காவலர் அன்னப்பா நாயக் உட்பட 6 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பெங்களூரு சித்தாபுரா காவல்நிலையத்தில் ராகேஷ் என்பவர் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 கோடியே 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க கிராமங்களின் வழியாகவே ஆந்திரா வரை பயணித்ததாகவும் கைது செய்யப்பட்ட கோபால் என்பவர் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
















