கோவை வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திபுரம் பகுதியில் 208 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவைத் திறப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவர் ஹவுஸ் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
Go Back ஸ்டாலின் எனக் கோஷம் எழுப்பிய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக இளைஞரணி நிர்வாகி கிருஷ்ணன், கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்தாகக் காரணமாக இருந்துவிட்டு, மத்திய அரசை குற்றம்சாட்டுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
















