வியட்நாமில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன.
ஐந்து லட்சம் குடும்பங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாகக் கனமழை மற்றும் நிலச்சரிவை வியட்நாம் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கும் மேற்பட்டோா் ஆபத்தான பகுதிகளில் வாழ்ந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
















