நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ் . காலனி பகுதியை சேர்ந்த சுஜா சங்கரி என்பவரது வீட்டில் 2015ம் ஆண்டு 75 சவரன் நகைகள் மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளைபோனது.
10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொள்ளையர்கள் பிடிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவீத தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
பல்வேறு நகை திருட்டு வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய நீதிமன்றம், அந்த வழக்குகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது ADSP தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
திருடுபோன நகைகைளை கண்டுபிடிக்கத் திறமைமிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டம்தோறும் உருவாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
















