சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாகிர் அம்மாபாளையத்தில் ஜவுளி பூங்கா போர்வையில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, 40 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
















