அமெரிக்காவில் வான்கோழியை மன்னித்து விடுவிக்கும் பாரம்பரிய நிகழ்வில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.
வான்கோழியை இறைச்சிக்காக வெட்டாமல் மன்னித்து விடுவிக்கும் சம்பிரதாய நிகழ்வை டிரம்ப் மேற்கொண்டார்.
அப்போது வான்கோழியை போல டிரம்ப் ஒலி எழுப்பியது சுற்றியிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
1863-ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர்கள் வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு எடுத்துச் சென்று அவற்றை மன்னிக்கும் சம்பிரதாயத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
















