கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கட்டுமான தொழில் நடந்தி வந்த நிலையில், நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாகக் கூறி அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், சோமசுந்தரத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
முத்துக்குமார் யார் என்று தெரியாது எனக்கூறிய சோமசுந்தரத்திடம் நகையை திரும்பிக் கொடுக்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.
வேறு வழி இல்லாமல், ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், நகை வியாபாரி முத்துகுமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















