கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 5 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
வழக்கு தொடர்பாகப் பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில், கரூர் காவல்நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர் உட்பட 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனிடையே கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நபர்களுக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
















