கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாகக் கருப்பு நிற கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன கருப்பு நிற கேரட் சாகுபடி? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவித் தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான் கருப்பு நிற கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை களமிறங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் பீகாரில் இருந்து கருப்பு நிற கேரட் விதைகள் பெறப்பட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவின் நாற்றங்காலில் தற்போது அவை விதைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருப்பு நிற கேரட் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். கருப்பு நிற கேரட்டில் ஆன்த்தோசைலின் என்கிற திரவம் அதிகமாக உள்ளதால் மனிதர்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

கருப்பு நிற கேரட்டில் விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்டவை அதிகமாக உள்ளதால் மனிதர்களுக்குப் பல நன்மைகளை தரக்கூடியது. இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்…. தற்போது சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில விவசாயிகளுக்கும் கருப்பு நிற கேரட் விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருப்பு நிற கேரட் விதைகள் கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலம் முதன்முறையாக நீலகிரி மாவட்ட விவசாயி சந்திரன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டு அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குன்னூர் சிம்ஸ் பூங்கா, நஞ்சநாடு தோட்டக்கலைத்துறை ஆகிய இடங்களில் சோதனை அடிப்படையில் இந்தக் கருப்பு நிற கேரட் பயிரிடப்பட்டுள்ளன.

இயற்கை முறையில் இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடி செய்யும் சோதனை நடைபெற்று வருகிறது. கருப்பு நிற கேரட் இலைகளில் உள்ள எண்ணெய், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்தாக உள்ளது என்பதும் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் பல காய்கறிகள் பயிரிடப்பட்டு வரும் நிலையில், மனிதர்களுக்குப் பல நன்மைகளைத் தரக்கூடிய இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடியும் நடைபெறுகிறது. இந்தச் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடியுடன் கருப்பு நிற கேரட் சாகுபடியையும் இணைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tags: விவசாயிகள்Cultivation of black carrots that are weed-free: Farmers showing interestகேரட் களைகட்டும் சாகுபடி
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

Next Post

அடுத்த சில மணி நேரங்களில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி – பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies