சீனாவின் யுனான் மாகாணத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 3 ஆயிரம் மேஜைகளுடன் பிரமாண்ட புத்தாண்டு தெருவிருந்து நிகழ்ச்சியை ஹானி இனக்குழுவினர் கொண்டாடினர்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஹோங்கே ஹானியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஹானி இனக்குழுவினர். இவர்கள் அவா லோ ஷு எனப்படும் விழாவைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.
இது பொதுவாகச் சந்திர மாதத்தில் விவசாயம் சார்ந்த கொண்டாட்டமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சமைத்த உணவுகள், பலகாரங்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றை தெருவில் அனைவருடன் இணைந்து சாப்பிடும் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதையொட்டி 3 ஆயிரம் மேஜைகள் தெருவில் அமைக்கப்பட்டு அதில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டு ஹானி இனக்குழுவினர் பரிமாறி மகிழ்ந்தனர்.
மேலும் வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, லெட்சே எனப்படும் நடனம் மற்றும் மரத்தாலான டிரம் நடனம் போன்ற குழு நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
















