பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் சீக்கிய மத குருவான தேஜ் பஹதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழா நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதம் அமைதியையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது என்பதை ஆப்ரேஷன் சிந்தூரின்போது உலக நாடுகள் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்தியா முழு பலம் மற்றும் தைரியத்துடன் முன்னேறி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
















