திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லையென பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தனபாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி கூட்டமானது, மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. மேயர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய 14வது வார்டு உறுப்பினர் தனபாலன், தனது பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகக் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
உடனே அவரது இருக்கை அருகே வந்த திமுக உறுப்பினர்கள், தனபாலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனபாலனை சஸ்பெண்ட் செய்யுமாறு முழக்கமிட்டனர். இதையடுத்து, தனபாலனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டார்.
















