பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமம் சிறு களந்தை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாறை குழிகள் வெட்டப்பட்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ரசாயன பேரல்கள் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியில் பேரல்கள் குவிக்கப்பட்டு, அதில் உள்ள ரசாயனங்கள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியானதாகவும் கூறப்படுகிறது.
















