தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
மேலகளக்குடி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தியின் மகள் காவ்யா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
இவரும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த காவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















