அம்பாசமுத்திரம் அருகே வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பதியாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் பின்புறம் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, மிக நீளமான பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவலறிந்து சென்ற வனத்துறையினர், சுமார் 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாக மீட்டனர். பின்னர், பாபநாசம் வனப் பகுதியில் பத்திரமாக ராஜநாகத்தை விடுவித்தனர்.
















