ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாகச் சென்று கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊருக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் மொத்தமும் ஆறுபோல் சென்று மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தினந்தோறும் சுமார் 12 லட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் கலப்பதாகக் கூறப்படுகிறது.
மன்னார் வளைகுடாவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள் போன்றவை உள்ளன.
இந்தச் சூழலில், கடலில் சாக்கடை கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்தப்பகுதி மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உயிர்ப்பித்து, கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















