ஈரோட்டில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோட்டில் LVR காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகன், புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், கமலா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கமலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கொடூரமாகக் கொலை செய்து ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தெரியாமல் தாய் கமலாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது மகன் மகேந்திர சேனாதிபதி, செல்போன் அழைப்பு ஏற்கப்படாததால் பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டு பெண் வந்து பார்த்தபோது கமலா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சேகரித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
















