தெலங்கானா மாநிலம் மகாபூப் நகர் மாவட்டம் பில்லிகுண்டு அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்.
பில்லிகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேதிப் பொருள்களுடன் வந்த டேங்கர் லாரி, இரும்பு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
















