டெல்லியில் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போன்களை தயாரித்த ஆலையைக் கண்டுபிடித்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வணிக சந்தைக்குப் பெயர் பெற்ற கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக மொபைல்போன் தயாரிப்பு ஆலை இயங்கி வருவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து அந்த ஆலையைக் கண்டுபிடித்து அங்குச் சோதனை செய்த போலீசார், ஆயிரத்து 826 செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அங்குப் பணியாற்றி வந்த ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பழைய அல்லது திருடப்பட்ட செல்போன்களை குற்றவாளிகள் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
















