ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை திருத்தம் செய்து புதியதை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உயர்நிலை ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், ரியல் எஸ்டேட் ஆணையம் மற்றும் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆணைய உத்தரவுகளைக் கட்டுமான நிறுவனங்கள் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது .
இதனால், ரியல் எஸ்டேட் சட்டப்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் கிடப்பில் போடப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம், ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் இருக்க வேண்டும் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
















