பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழையை எதிர்கொள்ள அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என அவர் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி திமுக அரசு, மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கமல்ஹாசன் தனது கட்சியை கலைத்துவிட்டாரா? அல்லது திமுகவுடன் இணைத்துவிட்டாரா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
















