SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி அடுத்த பெரியசாமி நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 2002 – 2005ம் ஆண்டு வாக்காளர் படிவத்தில் சுமார் 300 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதால், விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்படவில்லை.
இதைக் கண்டித்து சேலம் – ஆத்தூர் நெடுஞ்சாலையில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விண்ணப்பங்களை உடனடியாகப் பெற உத்தரவிட்டார்.
















