கோவையில் கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
கோவை ரத்தினபுரி புதுப்பாலம் அருகே கார் பழுதுபார்க்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
அங்குத் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து தீயணப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால், அதற்குள் தீ மளமளவெனப் பரவியதில் 5 கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. விபத்து காரணமாகப் புகை மண்டலம் சூழ்ந்ததால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
















