போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் கரீபியன் கடல்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. வெனிசுலாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், ‘வெனிசுலா நாட்டு வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். விமான நிறுவனங்கள், விமானிகள், போதை கடத்தல்காரர்கள் அனைவரும் வெனிசுலா வான்வெளி மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.
இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
















