தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.
அதன்படி, 128வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.
கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்றபோது படித்த அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்த பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்ததாகவும்,
பழங்காலத்து இயற்கை வேளாண் முறைகளை தமிழக மக்கள் பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் கலாச்சாரமும், தமிழ் மொழியும் உயர்வானது எனக்கூறிய பிரதமர் மோடி,
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என தமிழில் பேசினார்.
உலகின் மிக பழமையான தமிழ்மொழி, தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது என்றும், தமிழ் மொழியின் வளத்தை பறைசாற்றும் வகையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
நடப்பாண்டும் “தமிழின் கற்காலம்” என்ற கருப்பொருளில் காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
















