தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம் வேண்டும் என சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் தங்க, ரத்தின கற்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில், உலக அளவில் தங்கத்தின் விலையை ஏற்கும் நாடாக பாரதம் இருக்கிறது என்றும், அதற்கு பதிலாக தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக மாற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தங்கத்திற்கான தேவையில் 20 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே கொடுத்துவிடும் என்றும், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் உலகின் நகை மையமாக பாரதம் உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பாரதம் தங்கத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், 24 காரட் தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
















