தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தஞ்சை மாரியம்மன் கோயில் அருகே சுந்தரம் மீனா நகரில் கடந்த 2 நாட்களாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீட்டினுள் புகுந்த மழைநீரால் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விஷ ஜந்துகள் வீட்டில் புகும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளனர். கடந்த 15 வருடங்களாக மழை பெய்தால் இதே பிரச்னையை சந்தித்து வருவதாகவும் குற்றச்சாட்டினர். மேலும், தங்கள் பகுதியில் முறையாக வடிகால்வாய்களை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















