நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும், விடுமுறை நாள்களை தவிர்த்து மொத்தம் 15 அமர்வுகளுக்கு மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி கார் வெடிப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சைக் கேட்கதயாராக உள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றம் அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.
















