நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த கூட்டத்தொடர் 19-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் அணுசக்தி, கார்ப்பரேட் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதன்படி டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
















