திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்று பேசிய எலான் மஸ்க், அமெரிக்கா திறமையான இந்தியர்களால், பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு குடியேறிய இந்தியர்களால் அமெரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருவதாக கூறினார்.
மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், இதுபோன்ற கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், எச்1பி விசா திட்டத்தில் சில தவறான பயன்பாடுகள் இருந்திருப்பதாக தாம் நினைப்பதாகவும், ஆனால் இந்த திட்டத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இல்லை என்றும் கூறினார்.
















