திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதற்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தேரோட்டத்திற்கு வந்த பக்தர்களுக்கு மாட வீதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா எனச் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
















